dhanuskodi

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா செலுவை கிராமத்தை சேர்ந்த 13 பேர் இன்று ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் சுற்றுலா வந்த அனைவரும் கோயிலுக்கு சென்றுவிட்டு தனுஷ்கோடி வந்துள்ளனர். அங்கு அரிச்சல்முனை கடல் பகுதியில் குளித்து கொண்டிருக்கும் போது 3 குழுந்தைகளை கடல் அலையில் சிக்கினர்.

Advertisment

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்த குழந்தைகளின் பெற்றோர் கூச்சலிட்டபடி குழந்தைகளை மீட்க முயன்றனர். ஆனால் ஒரு குழந்தையை கூட காப்பாற்ற முடியவில்லை. செலுகையை சேர்ந்த ஆனந்தன் மகன் இன்பத்தமிழன் (12), கோனேரி கோட்டையை சேர்ந்த ஜெகநாதன் மகள் இனிதா (10) பூமிநாதன் மகள் சுவேதா (11) ஆகிய மூன்று குழந்தைகளும் உயிரிழந்தனர். இதில் சிறுவன் இன்பதமிழன் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. மற்ற இரு குழந்தைகளின் உடலையும் போலீஸார் மற்றும் மீனவர்கள் தேடி வருகின்றனர்.

dha

சுற்றுலா வந்த இடத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தால் அங்கு வந்திருந்த பிறபகுதி சுற்றலா பயணிகளும் சோகத்தில் ஆழ்ந்தனர். மேலும் இப்பகுதி ஆபத்தானது என்று ஒரு இடத்தில் கூட எச்சரிக்கை பலகை எதுவும் இல்லாதது பெரும் வேதனைகுறியது.

Advertisment