திரையரங்கில் ஏற்பட்ட மோதல்; தனுஷ் ரசிகரின் ஆணுறுப்பை அறுத்து கொலை!

Dhanush fan's incident for Clash in the theater

சென்னை ஓட்டேரியைச் சேர்ந்தவர் சிராஜ் (35.) நடிகர் தனுஷின் தீவிர ரசிகரான இவர் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த இவரது மனைவி தனது மூன்று குழந்தைகளை அழைத்துக் கொண்டு இவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாகக்கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிராஜ் தனது நண்பர்கள் சிலருடன் அப்பகுதியில் உள்ள மகாலட்சுமி திரையரங்கில் அண்மையில் நடிகர் தனுஷ் நடித்து இயக்கிய ராயன் திரைப்படத்தை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, குடிபோதையில் திரையரங்குக்குள் நண்பர்களுக்குள் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட முன்பகையால் ஆத்திரத்தில் இருந்த சிராஜ் நண்பர்கள், நேற்று (13-08-24) மாலை குடிபோதையில் இருந்தபோது, சிராஜை தாக்கி அவரது பற்களை உடைத்து அவரைஇழுத்துச் சென்று அங்குள்ள கட்டிடம் ஒன்றில் அடைத்து அவரது ஆண் உறுப்பை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்வு இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை தொடர்பாக வழக்கு பதிந்து சிராஜின் நண்பர்கள் இருவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திரையரங்கில் ஏற்பட்ட மோதலில் நடிகர் தனுஷின் ரசிகர் ஆணுறுப்பு அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai DHANUSH fans incident theatre
இதையும் படியுங்கள்
Subscribe