/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/shan.jpg)
தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம், 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த மே மாதம் 29-ந் தேதி முதல் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில், திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் தனக்கு பேச வாய்ப்பு வழங்கும்படி சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் தனபால்,
’ஜெ.அன்பழகனை அவையில் வைத்துக்கொண்டு தினம், தினம் கஷ்டப்படுகிறேன்’. பேரவைக்கு தினமும் தாமதமாக வரும் ஜெ.அன்பழகன் வந்தவுடன் பேசுவதற்கு அனுமதி கோருகிறார், அனுமதிக்கவில்லை என்றால் வெளியில் சென்றுவிடுகிறார் என அவர் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)