Advertisment

தனலெட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமத்தில் 26 இடங்களில் வருமான வரிசோதனை!

Dhanalakshmi Srinivasan

Advertisment

பெரம்பலூரை தலைமையிடமாக கொண்ட தனலெட்சுமி கல்விக்குழுமம் செயல்பட்டு வருகிறது. இந்த குழுமத்தின் கீழ் பள்ளி, கலைக்கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. அதே போல் திருச்சி, சமயபுரம், மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களிலும் இந்த கல்வி குழுமத்திற்கு சொந்தமான கல்லூரிகள் இயங்கி வருகிறது.

Dhanalakshmi Srinivasan

இந்த குழுமத்திற்கு சொந்தமான சுமார் 26 இடங்களில் ஒரே நேரத்தில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். வரி ஏய்ப்பு காரணமாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது. மேலும் கல்விக்குழுமத் தலைவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment

Dhanalakshmi Srinivasan

மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள சீனிவாசன் மகன் கதிரவன் உள்ளிட்ட வீடுகளில் காலையிலிருந்து சோதனை நடைபெற்று வருகிறது.

ஜெ.டி.ஆர்.

Dhanalakshmi Srinivasan Educational institutions Income Tax officers raided
இதையும் படியுங்கள்
Subscribe