Advertisment

வெற்றிவேல் யாத்திரைக்கு எதிராக தம்ம சக்கர யாத்திரை...

Dhamma Chakra yatra vel yaatra

பா.ஜ.க-வின் வெற்றிவேல் யாத்திரை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் நவம்பர் 6ஆம் தேதி திருத்தணியில் தொடங்கும் இந்த வெற்றிவேல் யாத்திரை டிசம்பர் 6ல் திருச்செந்துாரில் நிறைவடையும்படி திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வெற்றிவேல் யாத்திரைத் தடை செய்யவேண்டும் என செந்தில்குமார் என்பவர் வழக்குத்தொடுத்துள்ள நிலையில், அந்த வழக்கு இன்றுவிசாரணைக்கு வர இருக்கிறது.

Advertisment

இந்த சூழ்நிலையில் தலித் மக்கள் அமைப்பு சார்பாக அதே நாளில் திருத்தணியில் இருந்து தம்ம சக்கர யாத்திரை நடத்துவது என தீர்மானித்து. புத்தரின் தம்ம வழியில் கோட்டை நோக்கி யாத்திரை என அறிவித்து உள்ளனர்.

திருத்தணிகோயில் உள்ள இடம் புத்தரின் பாதை இருந்ததாகவும் அதை கோவில் நிர்வாகமே, ஒப்புக்கொண்டுள்ளதாகவும் மாநில அமைப்பாளர் மு.சு.திருநாவுகரசு தெரிவித்துள்ளார். மேலும், உத்தரபிரதேச மாநிலம் மட்டுமல்ல பா.ஜ.க. ஆளும் அனைத்து இடங்களிலும் தலித் பெண்கள், பழங்குடிகள், சிறுபான்மை பெண்கள் பாலியல் படுகொலைகள் தடுக்க தனி சட்டம், மனுஸ்மிருதி மட்டுமல்ல சாதி பாகுபாடு வலியுறுத்தும் அனைத்து நூல்களும் தடை செய்யவேண்டும், மாநிலத்தில் முதல்வர் பழனிச்சாமி, மத்திய அரசு பிரதிநிதி முருகன் சாமி, தமிழ் கடவுள் எங்கள் சுப்பிரமணியசுவாமி என மூன்று "சாமி' இடம் முறையிடுவது இந்த யாத்திரையின் நோக்கமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

வெற்றிவேல் யாத்திரையும், தம்ம சக்கர யாத்திரையும் ஒரே நாளில் என்பதால் அரசு அனுமதி தர மறுத்துள்ள நிலையில், தலித் அமைப்பினர், பா.ஜ.க முன்பாக நாங்கள் யாத்திரைக்கு அனுமதி கோரியிருந்த நிலையில் எங்களுக்கு மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அரசு அனுமதி மறுத்தாலும் எங்களின் யாத்திரை யாராலும் தடை செய்ய முடியாது என அறிவுத்துள்ளார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe