தமிழக டிஜிபி திரிபாதிக்கு ஆயுதபடை காவலர் பகீர் ஆடியோ புகார் ! 

திருச்சி மாநகர ஆயுதபடை காவலர் அருளானந்தன் என்பவர் டிஜிபி திரிபாதிக்கு கோரிக்கை விடுத்து பகிரங்க ஆடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், அப்பா மாதிரியாக இருக்கும் நீங்கள் மூத்த மகன் இருக்கும் போது இளைய மகனுக்கு எப்படி பதவி உயர்வு கொடுக்கலாம். 1995 ம் பேஸ் போலிசார் இருக்கும் போது தமிழ்நாடு முழுவதும் 1997 பேட்ஜ்க்கு எப்படி பதவி உயர்வு கொடுக்கலாம். என்னிடம் ஜீனியராக பணியாற்றியவன், நான் குருவாக இருந்து கற்று கொடுத்தவனுக்கு என்னை விட உயர் பதவி கொடுப்பது எப்படி சரியாக இருக்கும்.

d

தமிழ்நாட்டில் பல பேர் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார்கள். காவல்துறையில் 22 வருடங்கள் பணியாற்றி வருகிறேன். எந்த வித சார்ஜஸ் வாங்கவில்லை. ஆனாலும் இப்படி பண்ணலாமா ! நான் குற்றசாட்டா சொல்லவில்லை. அவர்கள் பதவி உயர்வை தடுக்க நினைக்கவில்லை. ஆனால் எங்களுக்கு ஏன் கொடுக்கவில்லை என்று தான் கேட்கிறேன். இதை சொல்வதற்கே பயமாக இருக்கிறதுஎன்று அந்த ஆடியாவில் பேசியிருக்கிறார். தற்போது இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

dgp
இதையும் படியுங்கள்
Subscribe