/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1450.jpg)
விபுல்அம்ருத்லால்ஷா தயாரிப்பில்சுதிப்தோசென்இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'தி கேரளாஸ்டோரி’. இப்படத்தில்அதாசர்மா, சித்திஇட்னானிஉள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படத்தின்டீசர்கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. அதில் 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டுசிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்குக் கடத்தப்படுவதாகஹிஜாப்அணிந்த ஒரு பெண் பேசுவது போல் காட்சி இடம்பெற்றது. மதவெறுப்பைதூண்டும் வகையில் படம்இருப்பதாகபலதரப்பிலிருந்துகடும் எதிர்ப்புகள் எழுந்தன.
இப்படத்தின்ட்ரைலர்கடந்த 1 ஆம் தேதி வெளியானது. இதில் மதமாற்றம் எவ்வாறு செய்கிறார்கள் என விரிவான சில காட்சிகள் காட்டப்பட்டிருந்தன. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் மே 5 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது.இப்படத்திற்குகேரளாவில் கடுமையான எதிர்ப்பு இருந்து வருகிறது. இப்படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என 2 தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தனர். 2 தரப்பு மனுவும் தனித்தனியே விசாரணைக்கு வந்தபோது அம்மனுவை ஏற்க மறுத்து கேரள உயர்நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு அறிவுறுத்தி மனுவை நிராகரித்தது. பின்பு இந்த வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதனிடையே இந்த படத்தை வெளியிடக்கூடாதுஎனச்சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், "ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறீர்கள்? முன்பே வந்திருந்தால் யாரையாவது படத்தைப் பார்த்து முடிவு செய்யச் சொல்லியிருக்கலாம். நீங்கள் இன்னும் படம் பார்க்கவில்லை. பிரச்சனைகள் வரும் என்று எப்படி யூகிக்க முடியும்? மேலும், கேரளா உயர்நீதிமன்றம் ஏற்கனவே இந்த விவகாரத்தைக் கைப்பற்றி உள்ளது."எனச்சென்னை உயர்நீதிமன்றம் மனுதாரரிடம் கூறி மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த நிலையில் திட்டமிட்டபடி நாளை(5.5.2023) கேரளஸ்டோரிவெளியாகவுள்ளது. இதனையொட்டி தி கேரளாஸ்டோரிவெளியாகவுள்ளதிரையரங்குகளுக்குப்பாதுகாப்பு வழங்க அனைத்து காவல்ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபுஉத்தரவிட்டுள்ளார். மேலும்அசம்பாவிதங்களைத்தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளைஅப்புறப்படுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)