Advertisment

டிஐஜி விஜயகுமார் உடலுக்கு டிஜிபி, அமைச்சர் ஐ. பெரியசாமி நேரில் அஞ்சலி

DGP, Minister I.Periyaswamy paid tribute to DIG Vijayakumar in person

கோவை சரக டிஐஜியாக கடந்த ஜனவரி மாதம் முதல் பணியாற்றி வந்த விஜயகுமார், இன்று அதிகாலை தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுத்தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு,டிஐஜி தற்கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

டி.ஐ.ஜி.யின் இந்த தற்கொலைக்கு குடும்ப பிரச்சனை காரணமாக இருக்கலாம் எனத்தகவல் வெளியாகியுள்ளது. தனது பாதுகாவலரின் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியது. தற்பொழுது அவரது உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் ரத்தினம் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் அமைச்சர் ஐ. பெரியசாமி உள்ளிட்ட பலரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை 5 மணிக்குஅவரது உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட இருக்கிறது.

Advertisment

dgp police Theni
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe