
திருச்சியில் கஞ்சாவைக் கடத்திக்கொண்டு டாடா இண்டிகா கார் செல்வதாக மாநகரக் காவல்துறை கமிஷனரின் தனிப்படை போலீசாருக்குத் தகவல் வந்ததது. இதனைத் தொடர்ந்து மன்னார்புரம் நான்குரோட்டில் தொடங்கி விரட்டிச் சென்றதோடு, உயிரைப் பணயம் வைத்து பேனட்டில் தொங்கியபடி சென்று, காயமடைந்ததையும் பொருட்படுத்தாது கஞ்சா வியாபாரியைப் பிடித்தார் தனிப்படையைச் சேர்ந்த ஏட்டு சரவணன்.
இவரது இந்தத் துணிச்சலான முயற்சிக்கு தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சரவணனை ஃபோனில் தொடர்புகொண்டு பாராட்டிய டிஜிபி, தேவையான மருத்துவ செலவுகளை செய்துகொடுக்க மாநகரக் கமிஷனருக்கு உத்தரவிட்டிருப்பதாக அவர் தொிவித்துள்ளார். சரவணனின் வீரதீர செயலைப் பாராட்டி அவரை ஊக்கப்படுத்தும் விதமாக, ரூ. 25 ஆயிரம் பரிசுத்தொகையையும் அறிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)