Skip to main content

தமிழக டிஜிபி திரிபாதிக்கு ஆயுதபடை காவலர் பகீர் ஆடியோ புகார் ! 

Published on 20/08/2019 | Edited on 20/08/2019

திருச்சி மாநகர ஆயுதபடை காவலர் அருளானந்தன் என்பவர் டிஜிபி திரிபாதிக்கு கோரிக்கை விடுத்து பகிரங்க ஆடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில்,  அப்பா மாதிரியாக இருக்கும் நீங்கள் மூத்த மகன் இருக்கும் போது இளைய மகனுக்கு எப்படி பதவி உயர்வு கொடுக்கலாம். 1995 ம் பேஸ் போலிசார் இருக்கும் போது தமிழ்நாடு முழுவதும் 1997 பேட்ஜ்க்கு எப்படி பதவி உயர்வு கொடுக்கலாம். என்னிடம் ஜீனியராக பணியாற்றியவன், நான் குருவாக இருந்து கற்று கொடுத்தவனுக்கு என்னை விட உயர் பதவி கொடுப்பது எப்படி சரியாக இருக்கும். 

d

 

தமிழ்நாட்டில் பல பேர் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார்கள். காவல்துறையில் 22 வருடங்கள் பணியாற்றி வருகிறேன். எந்த வித சார்ஜஸ் வாங்கவில்லை. ஆனாலும் இப்படி பண்ணலாமா ! நான் குற்றசாட்டா சொல்லவில்லை. அவர்கள் பதவி உயர்வை தடுக்க நினைக்கவில்லை. ஆனால் எங்களுக்கு ஏன் கொடுக்கவில்லை என்று தான் கேட்கிறேன். இதை சொல்வதற்கே பயமாக இருக்கிறது என்று அந்த ஆடியாவில் பேசியிருக்கிறார். தற்போது இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

தெலங்கானா டிஜிபி இடைநீக்கம்; தேர்தல் ஆணையத்தின் அடுத்த நடவடிக்கை!

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
Suspension order of Telangana DGP revoked for Meeting with CM  Revanth Reddy;

தெலங்கானா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

அந்த வகையில் தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 64 இடங்களையும், பிஆர்எஸ் 39 இடங்களையும், பாஜக 8 இடங்களையும், ஏஐஎம்ஐஎம் கட்சி 7 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து தெலங்கானாவில் கடந்த 7 ஆம் தேதி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது மாநிலத்தின் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து சில அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் போது காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வந்தது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமார், ரேவந்த் ரெட்டியை சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதன் மூலம், தேர்தல் விதிகளை மீறியதாக டிஜிபி அஞ்சனி குமாரை தேர்தல் ஆணையம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. 

தற்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமாரின் இடைநீக்கத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. மேலும், அவர் மீண்டும் அவரது பணியை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

முன்னாள் டிஜிபி மீது வழக்குப்பதிவு

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Case registered against former DGP

 

தமிழக முதல்வர் பற்றிய அவதூறு கருத்துக்களை பரப்பியதாக முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக முதல்வர் சொல்லாத கருத்துகளை சொல்லியதாக அவதூறு பரப்பியதாக முன்னாள் டிஜிபியும், அதிமுக முன்னாள் எம்எல்ஏவுமான நட்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக மத்திய மாவட்ட வழக்கறிஞர் அணியினர் திருச்சி எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தனர்.

 

அந்த புகாரில் 'இந்துகள் வாக்கு வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாக பொய் செய்தியை நடராஜன் வாட்ஸப் அப் குழுக்களில் பரப்பியதாகவும், முதல்வர் கூறாத ஒன்றை கூறியதாக அவதூறு பரப்பும் அவர் மீது நடவடிக்கை என கூறப்பட்டது. இந்நிலையில், முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது ஏழு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.