Advertisment

கிரிவலம் முடித்துவிட்டு ஊருக்குத் திரும்பிய கர்நாடக பக்தர்கள் உயிரிழப்பு!

devotees who returned to town after completing Girivalam lost their lives

Advertisment

திருவண்ணாமலை அணைக்கரை ரிங் ரோடு அருகில் கர்நாடகா பதிவெண் கொண்ட காரில் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் முடித்துவிட்டு பெங்களூர் நோக்கி சென்றனர். திருவண்ணாமலை அடுத்த நல்லவன் பாளையத்திலிருந்து கீழ்நாத்தூர் நோக்கி இரண்டு சக்கர வாகனத்தில் இரண்டு வாலிபர்கள் திருவண்ணாமலை நகருக்குள் சென்றனர்.

அணைக்கரை ரிங் ரோடு அருகே காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே, முருகன் வயது 36 தந்தை பெயர் ராஜமாணிக்கம், சே அகரம் செங்கம் தாலுக்கா, விஜயகாந்த் வயது 32 தந்தை பெயர் நாராயணன் கீழாத்தூர் ஆகியஇரண்டு வாலிபர்கள் உயிரிழந்தனர்.

விபத்து நடந்தது நேற்று இரவு பௌர்ணமி கிரிவலம் என்பதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நகரத்துக்குள் வரும் 9 சாலைகளும் பெரும் சிரமத்தை சந்தித்தனர். விபத்தால் புறவழிச்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூட்டத்தால் ஆம்புலன்ஸ் வர தாமதமானது. அதற்குள் இருவரும் இறந்துவிட்டனர். இறந்த உடல்களை திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisment

திருவண்ணாமலை மேற்கு காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரிக்க தொடங்கினர். விபத்து நடந்த உடன் காரில் இருந்த டிரைவர் தப்பி ஓடியிருந்தார். விபத்து நடத்திய காரின் ஓட்டுநர் யார்? அவர் எங்கே சென்றார் என்ற கோணத்தில்காவல் துறையினர் தேடி வருகின்றார்கள். காரின் உரிமையாளரை வரவைத்து விசாரணை நடத்துகின்றனர்.

accident karnataka thiruvannamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe