/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a72320.jpg)
கரூர் மாவட்டம் அருகே உள்ளது நெரூர் பகுதி இந்தப்பகுதியில் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் இந்தக் கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக கும்பகோணத்தில் இருந்து ஆறு பக்தர்கள் அந்தக் கோவிலுக்கு வந்துள்ளனர். இதனால் கோவிலில் யாகம் செய்துபூஜை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்காக யாக குண்டம் அமைக்கப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. தீயில் உருவான புகை கோயில் முழுக்க பரவியது. அப்பொழுது கோவில் வளாகத்திலேயே இருந்த மரத்தில் தேன்கூடு ஒன்று இருந்தது. அதிகப்படியான புகையால் தேன் கூட்டில் உள்ள தேனீக்கள் கிளம்பின.
கோவிலில் இருந்த பக்தர்கள் அனைவரையும் தேனீக்கள் கொட்ட தொடங்கியது. உடனடியாக அனைவரும் கோவிலுக்கு உள்ளேயே ஒளிந்து கொண்டனர். தொடர்ந்து கரூர் தீயணைப்பு துறை எனக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு படையினர் பாதுகாப்பு உடை, முக கவசம் ஆகியவற்றை அணிந்து கொண்டு உள்ளே சென்று பக்தர்களை சலனமில்லாமல் ஒவ்வொருவராக வெளியே கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட அனைவரும் கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். யாகம் வளர்த்த புகையால் தேன் கூட்டிலிருந்து தேனீக்கள் கிளம்பி, கொட்டிய சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)