Skip to main content

ஆடிக் கிருத்திகையையொட்டி, முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்! 

Published on 23/07/2022 | Edited on 23/07/2022

 

Devotees thronged Murugan temples on the occasion of Aadik Krithikai!

 

ஆடிக் கிருத்திகையையொட்டி, திருத்தணி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் ஐந்து மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டன. தமிழகம் மற்றும் ஆந்திராவில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருத்தணியில் குவிந்துள்ளனர். 

 

பலரும் மொட்டையடித்து, சரவண பொய்கை குளத்தில் நீராடி, பின்னர் காவடி எடுத்து மலைக் கோயிலுக்கு சென்றனர். அதைத் தொடர்ந்து, சுமார் ஐந்து மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் முருகப் பெருமானுக்கு பட்டு வஸ்திரங்கள் வழங்கப்பட்டன. 

 

இன்று மாலை சரவண பொய்கை தெப்பக் குளத்தில் தெப்ப திருவிழா நடைபெறவுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால் திருத்தணியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல், மருதமலை, பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பிரசித்திப் பெற்ற முருகன் கோயில்களில் பக்தர்கள் குவிந்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் கோலாகலக் கொண்டாட்டம்!

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
Murugan Temples Celebrate Thaipusam

தமிழ்நாட்டில் அறுபடை வீடுகளான திருத்தணி, பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம் உட்பட நூற்றுக்கணக்கான முருகர் கோவில்களில் தைப்பூசத்தை முன்னிட்டு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம், ரத்னகிரி அருள்மிகு பாலமுருகன் திருக்கோவிலில் பாலமுருகப் பெருமானுக்கு பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு மகா அபிஷேகமும் மற்றும் தங்க அங்கி அலங்காரமும் செய்யப்பட்டு மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பாலமுருகப் பெருமான் மயில் மீது அமர்ந்தபடி பல்லாக்கில் பக்தர்கள் சுமந்தபடி கோவில் வளாகத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்து அருள் பாளித்தார். அடுத்ததாக தங்க ரதத்தை பக்தர்கள் இழுத்துச் செல்ல கோவில் வளாகத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு  அருள் பாளித்தார்.

இந்த தைப்பூச நிகழ்வின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே குடும்பம் குடும்பமாக வருகை தந்து முருகப்பெருமானை வழிபடுகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்தனர்.

Next Story

‘திருத்தணி கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு’ - கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

Published on 13/12/2023 | Edited on 13/12/2023
Attention Devotees going to Thiruthani Temple Important Announcement by Temple Administration

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மலைப் பாதையில் மிக்ஜாம் புயல் காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நாளை (14.12.2023) முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை கோயிலுக்குச் செல்ல பக்தர்கள் படி வழியினை மட்டுமே பயன்படுத்த கோயில் நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையின் தடுப்புச் சுவர் மிக்ஜாம் புயல் காரணமாக மலைச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மலைப்பாதையின் தடுப்புச் சுவரை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி தற்காலிகமாக அனைத்து ரக வாகனங்கள் செல்ல 11.12.2023 முதல் 16.12.2023 வரை தடை விதிக்கப்பட்டு மலைப்பாதை மற்றும் படி வழியில் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது.

தற்போது மலைப்பாதை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் இலேசாக மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மலைப் பாதையில் நடந்து செல்வதற்கு அனுமதியில்லை. நாளை (14.12.2023) முதல் டிசம்பர் 20 ஆம் தேதி (20.12.2023) வரை பக்தர்கள் மலைக் கோயிலுக்குச் செல்ல படி வழியினை மட்டுமே பயன்படுத்திக்கொள்ள கோயில் நிர்வாகத்தால் கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.