/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/suriyanar-art.jpg)
சூரியனார் கோயில் ஆதீன மடாதிபதி மகாலிங்க சுவாமி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்திபெற்ற சூரியனார் கோயில் ஆதீனம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 28வது தலைமை மாடதிபதியாக மகாலிங்க சுவாமி (வயது 54) என்பவர் இருந்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் ஹேமா ஸ்ரீ (வயது 47) என்ற பெண் பக்தர் ஒருவரை மகாலிங்க சுவாமி திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் பெங்களூரில் கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் திருமணம் செய்து கொண்டது தொடர்பாக மகாலிங்க சுவாமி விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘திருமணம் ஆனவர்களும் ஆதீன மடாதிபதியாக இருந்துள்ளனர். எனவே நான் யாரிடமும் எதையும் மறைக்க விரும்பவில்லை. நான் திருமணம் செய்து கொண்ட ஹேமா ஸ்ரீ, மடத்துக்கு பக்தராக வந்து சென்றவர் ஆவார். இனியும் அவர் மடத்திற்குப் பக்தராக மட்டுமே வந்து செல்வார்’ எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)