Advertisment

மகாளய அமாவாசை-பவானி கூடுதுறையில் குவிந்த பக்தர்கள்

 Devotees gather on Mahalaya Amavasai-Bhavani

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.கூடுதுறை ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கூடுதுறைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டனர். மேலும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் வட மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் அதிக அளவில் வந்து நீராடி வழிபட்டு சென்றனர்.

Advertisment

புரட்டாசி மாத மகாளய அமாவாசையான நேற்று ஏராளமான பொதுமக்கள் பவானி கூடுதுறைக்கு வந்திருந்தனர். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி, எள்ளும் தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல், பித்ரு பூஜை, தர்ப்பணம் போன்ற பரிகாரங்களை செய்தனர். தொடர்ந்து பொது மக்கள் சங்கமேஸ்வரரை தரிசனம் செய்தனர். நேரம் செல்ல செல்ல பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, சென்னை, கரூர் உள்பட பல்வேறு மாவட்ட பக்தர்கள் மற்றும் வெளிமாநில பக்தர்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுதுறையில் குவிந்து புனித நீராடினர். இதையொட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் குளிப்பதற்கு தனித்தனியாக தடுப்புகள் அமைக்கப்பட்டது. மேலும் கோவில் வளாகத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் வரிசையாக சென்று வழிபட்டனர். இதனால் பவானி நகரம் முழுவதும் பக்தர்களின் கூட்டமாக காணப்பட்டது.கண்காணிப்பு கேமரா அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் பொருட்டு கோவில் நிர்வாகத்தின் மூலம் பல்வேறு இடங்களில் 72 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

Advertisment

கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பொதுமக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.மேலும் புனித நீராடும் பகுதியில் போலீசார் ஒலிபெருக்கி மூலம் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து வலியுறுத்தினர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் படகுகள் மூலம் ஆற்றில் சென்று கண்காணித்து ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி வருகிறார்கள். இதனால் பவானி நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொதுமக்கள் வந்ததால் கோவில் வளாகத்தில் வாகனங்கள் அணிவகுத்தன.

இதையொட்டி பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர் தலைமையில் 300-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் நகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகிறார்கள்.கொடுமுடி இதே போல் கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். தொடர்ந்து அவர்கள் மகுடேஸ்வரரை வழிபட்டனர். இதே போல் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றிலும் பக்தர்கள் பலர் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.

bhavanidam Erode Festival
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe