Advertisment

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 15ஆம் தேதி திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு பூஜைகளுக்குப் பிறகு நேற்று (16.11.2021) அதிகாலை 5 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

பெரும்பாலும் கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து தங்கள் நேர்த்திக் கடனை கழிப்பர். அந்த வகையில், இன்று சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் காலையிலேயே மாலை அணிந்து விரதம் இருக்கத் தொடங்கினர்.