Advertisment

காதலுக்கு உதவுவதாக மனைவியின் தங்கையை சீரழித்த கொடூரன்-போக்சோவில் கைது !

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தங்கோடு அருகே காந்திநகர் காலனியை சேர்ந்தவர் கட்டிட காண்டிராக்டர் ஐயப்பன். இவர் ஐந்து வருடங்களுக்கு முன்பு இந்திரா காலனியைச் சேர்ந்த சரண்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கேரளாவில் புதிதாக கட்டிட காண்டிராக்டர் வேலை எடுத்து செய்துவந்த ஐயப்பனுக்கு வருமானம் அதிகமாக வந்த நிலையில் தனது குடும்பத்தைவிட தனது மனைவியின் குடும்பத்தை தனிக்கவனம் செலுத்தி கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.

Advertisment

devastating to wife's sister: building contractor arrested

police

இந்நிலையில் மனைவியின் தங்கையான பத்தாம் வகுப்பு மாணவியை அழைத்துக்கொண்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குச் சென்ற ஐயப்பன் காதலனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்து விட்டதாக கூறி கருக்கலைப்பு செய்ய கூறியுள்ளான். இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் அங்கு வருவதை அறிந்த காண்ட்ராக்டர் ஐயப்பன் அந்த சிறுமியை தவிக்க விட்டு தப்பிச் சென்றான்.

Advertisment

police

மாணவியிடம் விசாரித்தபோது அக்காள் கணவரான ஐயப்பன் ஆறு மாதங்களாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்தது வெளிச்சத்திற்கு வந்தது. பலாத்காரத்திற்கு உள்ளாகி கர்ப்பமான அந்த மாணவி அதேபகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவரை ஒருதலையாக காதலித்துள்ளார். இதனை தன்னிடம் சகஜமாகப் பேசிப் பழகிய அக்காள் கணவர் ஐயப்பனிடமும் தெரிவித்துள்ளார். ஐயப்பனும் காதலுக்கு உதவுவது போல் நடித்து அந்த மாணவியிடம் நெருக்கம் காட்டியுள்ளான். ஒருநாள் காதலன் அழைத்ததாக கூறி தனிமையான இடத்திற்கு சிறுமியுடன் சென்ற ஐயப்பன் அங்கு வைத்து மிரட்டி பலாத்காரம் செய்துள்ளான்.

police

அதன்பின்னர் கடந்த 6 மாதங்களாக அந்த மாணவியிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான். இதனால் கர்ப்பம் அடைந்த சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துள்ளான் அப்போது சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அரசு மருத்துவமனைக்குச் சென்றால் லஞ்சம் பணம் கொடுத்து எளிதில் கருக்கலைப்பு செய்து விடலாம் என்ற எண்ணத்தில் அங்கு சென்றுள்ளான். அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்த தகவலால் ஐயப்பன் சிக்கிக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஐயப்பனைபோக்சோசட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.

arrest posco police Sexual Abuse
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe