Advertisment

தேவாரம் அருகே சிறுத்தை புலி தாக்கி  மூன்று ஆடுகள் பலி!  பீதியில் கிராம மக்கள்!                                    

தேனி மாவட்டத்தில் உள்ளதேவாரம் அருகே இருக்கும் டி.ரெங்கநாதபுரத்தை சேர்ந்த கோபி என்பவர் தேவாரத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருடைய தோட்டம் டி.ரெங்கநாதபுரத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. அந்த தோட்டத்தில் கோபியின் தந்தை வெள்ளைச்சாமி தங்கி விவசாயத்தைப் பார்த்துக் கொண்டு நான்கு ஆடுகளையும் வளர்த்து வருகிறார்.

Advertisment

de

இந்த நிலையில்தான் நேற்று இரவு வழக்கம்போல் தோட்டத்தில் பண்ணை வீட்டின் முன் ஆடுகளை கட்டிவிட்டு வீட்டுக்குள் வெள்ளைச்சாமி தூங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென ஆடுகள் சத்தம் போடுவதை கண்டு பதறி அடித்துக்கொண்டு வெளியே வந்து பார்த்த போது வீட்டின் முன் கட்டியிருந்த நான்கு ஆடுகளில் மூன்று ஆடுகளை சிறுத்தை புலி தாக்கி கொடூரமாக இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து விட்டார். அதோடு சிறுத்தை புலி தாக்கியதில் இறந்த ஆடுகளில் ஒரு ஆட்டை 30 அடி தூரத்திற்கு இழுத்துச் சென்று கழுத்தைக் கவ்வி ரத்தத்தை குடித்து போட்டு விட்டு சென்று இருக்கிறது.

அதுபோல் மற்ற இரண்டு ஆடுகளின் ரத்தத்தை கொடுத்துவிட்டு குதறிப் போட்டுவிட்டு போயிருக்கிறது. இந்த விஷயத்தை வெள்ளைச்சாமி உடனே தனது மகன் கோபிக்கு தெரியப்படுத்தி இருக்கிறார். அதை தொடர்ந்து கோபியும் உடனே வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதனடிப்படையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த ஆடுகளையும் பார்வையிட்டுவிட்டு சிறுத்தை புலியின் தடயங்களையும் கண்டறிந்துவிட்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.

Advertisment

ஆனால் இந்த விஷயம் டி.ரெங்கநாத புரத்தைச் சேர்ந்த மக்களின் காதுக்கு எட்டியதின் பேரில் சிறுத்தை புலி தாக்கி இறந்த ஆடுகளையும் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்கு கூலி வேலைக்கு போகக் கூட அஞ்சிவருகிறார்கள் அதுபோல் 500க்கு மேற்பட்ட வீடுகள் உள்ள டி.ரெங்கநாதபுரம் மக்களும் கூட சிறுத்தை புலி ஊருக்குள் வந்து விடுமோ? என்ற பயத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் கூட முடங்கி கிடக்கிறார்கள், இச்சம்பவம் தேவாரம் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Theni
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe