/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/DEVANKU43434.jpg)
இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயத்தை தமிழகத்தில் அமைக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார்.
தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தின் கரூர் மற்றும் திண்டுக்கல்லில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் அமைக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார். அதன்படி, கரூர் மற்றும் திண்டுக்கல்லில் சுமார் 11,806 ஹெக்டேர் பரப்பளவில் கடவூர் தேவாங்கு சரணாலயம் அமையவுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவாங்கு என்ற உயிரினம் அழிந்து வரக்கூடிய இனங்களில் ஒன்று. தேவாங்குகள் இரவு நேர பாலூட்டிகள், அவை மர வகை இனத்தைச் சேர்ந்தவை. எனவே, தங்கள் வாழ்நாளில் பெரும் பகுதியை மரங்களில் கழிக்கின்றன. இந்த இனங்கள் விவசாய பயிர்களுக்கு சேதம் உண்டாக்கும் பூச்சிகளை வேட்டையாடி, விவசாயிகளுக்கு நன்மையை ஏற்படுத்துகின்றன. இந்த இனங்கள் சுற்றுச்சூழல் மற்றும் நிலப்பரப்பு, சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்காற்றுகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)