Devagauda, ​​Kumaraswamy condoles on Passed away of Tamil Nadu secular Janata Dal leader

Advertisment

தமிழக மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவராக இருந்த, குமாி மாவட்டம் தக்கலையைச் சோ்ந்த வழக்கறிஞர்முகம்மது இஸ்மாயில் (93). 17 -ஆம் தேதி இரவு உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 10 ஆண்டுகளாக அந்தக் கட்சியின் தமிழக தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில்,இன்று (18-11-2020) மாலை, அவாின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதையொட்டி, அவாின் மறைவுக்கு,முன்னாள் பிரதமர்தேவகவுடா மற்றும் கா்நாடக முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான குமாரசாமி ஆகியோர்இரங்கல் தொிவித்துள்ளனா். மேலும், நாகை எம்.எல்.ஏ தமிமுன் அன்சாாி, கேரளமுன்னாள் அமைச்சர்நீலலோகி தாசன் நாடார்மற்றும் அந்தக் கட்சியின் மாநில நிா்வாகிகள் எனப் பலரும் நோில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அரசியலில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து மறைந்தது வரை அரசியலில் நோ்மையாகவும்எளிமையாகவும் இருந்துவந்த முகம்மது இஸ்மாயில் குறித்து அவாின் நினைவுகளைப் பலர்பகிர்ந்தனா். அதில், குமாி மாவட்ட முஸ்லீம் சமுகத்தில், இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்ற முதல்பட்டதாாியும்முதல் வழக்கறிஞரும் இவா்தான். 1956- ல் குளச்சல் நகா்மன்றத் தலைவராக இருந்தாா். 1980-ல் பத்மனாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ ஆனாா்.

Advertisment

இந்தியாவில் பிரதமராக இருந்த மொராா்ஜி தேசாய், வி.பி.சிங், சந்திரசேகா், தேவகவுடா ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர். தேவகவுடா பிரதமராக இருக்கும் போது முகம்மது இஸ்மாயிலை கா்நாடக கவா்னராக அறிவித்தாா். அடுத்த நிமிடமே, முகம்மது இஸ்மாயில்,அந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளாமல், தேவகவுடாவிடமே நன்றியோடு திருப்பி ஒப்படைக்கிறேன் என்றார். காமராஜரோடு காங்கிரசில் இருந்து வெளியே வந்த போது, மீண்டும் கடைசி வரை காங்கிரசில் சேராமல் மாற்றுக் கட்சிகளோடுதான் அரசியலை தொடா்ந்தாா்.

கன்னியாகுமரியில் காமராஜர்நினைவு மண்டபம் திறப்பு விழாவில், பார்வையாளா்கள் வாிசையில் கடைசியில் உட்கார்ந்து இருந்த முகம்மது இஸ்மாயிலை, மேடையில் முதல்வராக இருந்த கலைஞர்பாா்த்துவிட, உடனே கலைஞர்எழுந்து, முகம்மது இஸ்மாயிலை மேடைக்கு அழைத்துத் தன்னுடைய அருகில் உட்காரவைத்தது அத்தனை பேரையும் நெகிழச் செய்தது. இவ்வாறு பலரும் அவரின் நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.