Details of the previous case against Satish...CBCID which received the FIR

Advertisment

இரு தினங்களுக்கு முன்பு ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்யா பரங்கிமலை ரயில் நிலையத்தில் சதீஷ் என்ற இளைஞரால் ரயில்வே ட்ராக்கில் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட சதீஷுக்கு 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சதீஷுக்கும் உயிரிழந்த மாணவி சத்ய பிரியாவுக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டு கல்லூரி மாணவியை சதீஷ் கல்லூரி வாயிலிலேயே சென்று தாக்கியதாக மாம்பலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகி இருந்தது.

 Details of the previous case against Satish...CBCID which received the FIR

அந்த வழக்கு தொடர்பான அறிக்கை விவரம் தற்போது வெளியாகியுள்ளது. கல்லூரி மாணவியிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டது தொடர்பாக இரண்டு முறை வெவ்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டிருந்தாலும் மாம்பலம் காவல் நிலையத்தில் மட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 23ஆம் தேதி தி.நகரில் கல்லூரி மாணவி சத்யா படித்து வந்த கல்லூரி வாயிலுக்கு சென்ற சதீஷ் தாக்குதலில் ஈடுபட்டுள்ளான். ஆனால் இது தொடர்பான வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் வாய்த்தகராறு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியின் தோழிகள் கல்லூரி மாணவி சத்யாவை சதீஷ் தாக்கியதாக வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் வாய்தகராறில் ஈடுபட்டதாக மட்டும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த அறிக்கையை, கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் பெற்றுள்ளனர்.