Advertisment

பிரதமரின் படம் அழிப்பு... தொடங்கியது சர்ச்சை!

bjp

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு வெகு விமர்சையாக செய்துவருகிறது. தமிழ்நாடு முழுவதும் செஸ் ஃபீவரை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் அந்த ஃபீவர் கொஞ்சம் கூடுதலாக உள்ளது. சென்னையில் திரும்பு இடங்கள் எல்லாம் செஸ் ஒலிம்பியாட் குறித்தான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரங்களில் பிரதமரின் படம் இல்லாததால் அதிருப்தி அடைந்த பாஜகவினர் பல இடங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பர பலகைகளில் பிரதமர் மோடியின் ஸ்டிக்கர் படத்தை ஒட்டி வருகின்றனர். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், '44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் துவக்கி வைப்பது மிக மகிழ்ச்சி. எனக்கு ஒரு சின்ன ஆதங்கம் இருக்கிறது. இது ஒரு தேசிய விழா. இதனை நடத்த தமிழகத்திற்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி, 186 நாடுகளில் இருந்து விளையாட்டு வீரர்கள் வருகிறார்கள். ஆனால் சென்னை வழியாக விமான நிலையத்தில் இருந்து இறங்கி வரும் பொழுது பார்த்தேன் பல இடங்களில் விளம்பரங்களில் அவரது படம் இல்லையே என்ற ஆதங்கம் எனக்கு இருக்கிறது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

Advertisment

Destroying the Prime Minister's picture... Controversy started!

இந்நிலையில் சென்னை அடையார் பேருந்து நிறுத்தத்தில் உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரத்தில் மோடி படத்தை பாஜகவினர் ஒட்டி சென்ற நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், மோடியின் படம் ஸ்ப்ரே பெயிண்ட் கொண்டு அழிக்கப்பட்டது. இதுவரை எந்த ஒரு சர்ச்சையும் ஏற்படாத வண்ணம் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகள் சென்றுகொண்டிருந்த நிலையில் தற்பொழுது இந்த செயல்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe