ADVERTISEMENT

காவல் நிலையங்கள் இருந்தும் குற்றங்கள் நடக்கதான் செய்கிறது - வெங்கைய்ய நாயுடு பேச்சு!

12:33 PM Jul 07, 2018 | Anonymous (not verified)

நாட்டின் துணை குடியரசுத்தலைவரும், பல்கலைக்கழக வேந்தருமான வெங்கைய்ய நாயுடு நேற்று புதுச்சேரி மத்திய பல்கலைகழக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் வரவேற்பு அளித்தார்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் வெங்கைய்ய நாயுடு பேசியதாவது,

ADVERTISEMENT

மத்திய அரசு மனித வள மேம்பாட்டுத்துறையில் 2016 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி புதுச்சேரி பல்கலைக்கழகம் தரமான கல்வியில் அகில இந்திய அளவில் 13 ஆவது இடத்திலிருப்பது பெருமைக்குரியதாக உள்ளது.

அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியா உலக அளவில் பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்திலுள்ள நாடாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவரவர் தாய்மொழியில் கல்வியை கற்க வேண்டும். அதுதான் சிறந்தது. ஆசிரியர்களும், மாணவர்களும் கடின உழைப்பையும் உயர்ந்த கனவுகளையும், குறிக்கோளையும் கொண்டு செயல்பட வேண்டும். இளைஞர்கள் பணம் சம்பாதிப்பது மட்டும் குறிக்கோளாக கொள்ள கூடாது. இது ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளும் பொருந்தும் என்று வெங்கைய்ய நாயுடு குறிப்பிட்டார்.

மேலும் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வருவதால் மட்டுமே ஒரு குற்றத்தை தடுத்துவிட முடியாது என்றும் காவல் நிலையங்கள் இருந்தும் குற்றங்கள் நடக்கதான் செய்கிறது ஆகவே மாற்றம் மக்களிடம் வர வேண்டும் என்று வலியுறுத்தினார். புதுச்சேரி பல்கலைகழகத்திற்கு தேவையானவற்றை செய்து தர மனிதவள மேம்பாட்டு துறையிடம் தெரிவிப்பேன் என்றும் வெங்கைய நாயுடு தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT