பேராயர் டெஸ்மண்ட் டுட்டு மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (27/12/2021) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடிவரும்; உள்நாட்டு போரின் போது அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசிற்கு எதிராக 2013-ஆம் ஆண்டு அந்நாட்டில் நடந்த காமன்வெல்த் மாநாட்டை உலகத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என வெளிப்படையாகத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசி வரும்; மனித உரிமைச் செயல்பாடுகளுக்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் (Desmond Tutu) மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நிறவெறி, இனவெறிக்கு எதிராக அவர் நடத்திய அறப்போர், வன்முறையால் சிக்குண்டுத் தவிக்கும் உலகிற்குவழிகாட்டட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.