திமுகவில் அதிரடி திருப்பமாக அக்கட்சியின் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் பொறுப்பிற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் திமு கழகம் அபார வெற்றி பெற்றது இதனைத் தொடர்ந்து கட்சியில் புதுப்பொலிவு ஏற்படுத்த முக.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

Advertisment

 Designation to Udhayanidhi... I'm so happy ...! - DMK Secretary senthilnathan

அதன் தொடக்கமாக திமுகழகத்தில் சமீப காலமாக மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள அக்கட்சியின் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் வரவேண்டும் என்பதுதான். இதை தற்போது தக்க தருணமாக முடிவு செய்த திமுகழகம் அக்கட்சியின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களிடம்ஆலோசனை நடத்திய பிறகு மறைந்த முதல்வர் கலைஞர் பிறந்த நாளுக்கு முன்பாகவே உதயநிதி ஸ்டாலினை திமு கழகத்தின் இளைஞர் அணி செயலாளராக நியமிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

இதற்காக அக்கட்சியின் தலைவர்கள் ஆலோசனை செய்து ஏற்கனவே தற்போது இளைஞர் அணிச் செயலாளராக உள்ள வெள்ளக்கோவில் சாமிநாதனிடம் பேசினார்கள். அதற்கு வெள்ளக்கோவில் சாமிநாதன் மிகுந்த மகிழ்ச்சியோடு இதைத்தான் நான் முன்பே எதிர்பார்த்தேன். தலைவர் கலைஞர் குடும்பத்தில் இருந்து தான் இந்த பொறுப்பிற்கு வரவேண்டும் என்று விரும்பினேன். ஆனால் கட்சித் தலைவரான தளபதி என்னை இளைஞரணி செயலாளராக நியமித்தார். அந்தப் பொறுப்பில் நான் முழுமையாக பணியாற்றினேன். இருப்பினும் கட்சியின் மேலிடம் தொடங்கி தொண்டர்கள் வரை தலைவர் கலைஞரின் குடும்பத்தில் இருந்து தான் இந்த பொறுப்பிற்கு ஒருவர் வரவேண்டும் என்று விருப்பம் இருந்தது. எனக்கும் அதே விருப்பம் தான். இப்போது எடுத்த முடிவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நான் மனப்பூர்வமாக இப்பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.

Advertisment

கட்சித் தலைமை வெள்ளகோயில் சாமிநாதனுக்கு தாய் கழகத்தில் முக்கிய பொறுப்பு வழங்க உள்ளதாக தெரிகிறது.