Skip to main content

6-வது நாளாக கடலுக்குச் செல்லாத மீனவர்கள் - வெறிச்சோடிய மீன் மார்க்கெட்

Published on 12/12/2022 | Edited on 12/12/2022

 

Deserted Fish Market- Fishermen of the fruit forest who have not gone to the sea for 6 days

 

'மாண்டஸ்' புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஒரு வாரத்திற்குப் பிறகு நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். குறிப்பாக ராமேஸ்வரம் பாம்பன், சென்னை காசிமேடு பகுதிகளில் உள்ள மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்கச் சென்றிருந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் காற்றின் வேகம் அதிகரிப்பு காரணமாக மீன் பிடிக்கச் செல்லாமல் இருந்தனர்.

 

இன்றும் பழவேற்காட்டில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. புயல் கரையைக் கடந்தும் காற்றின் வேகம் குறையாமல் இருப்பதால் இம்முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பழவேற்காட்டில் உள்ள மீன் ஏலக்கூடம் மீன் வரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“உணவின் தரம் ஒரு துளி கூட குறையக் கூடாது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
The quality of food should not decrease even a drop CM MK Stalin

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தைக் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்தத் திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டிருந்தது இதனையடுத்து காலை உணவுத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும் எனக் கடந்த தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.07.2024) தொடங்கி வைத்தார். அதன்படி இந்த திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கீழச்சேரியில் உள்ள அரசு உதவிப் பெறும் புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தால் 3 ஆயிரத்து 995 அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் சுமார் 2.23 லட்சம் குழந்தைகள் பயனடைய உள்ளனர். இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து உணவு உண்டார். அப்போது தனக்கு அருகில் அமர்ந்திருந்த சிறுமிகளுக்கு காலை உணவை ஊட்டி விட்டு அவர்களுடன் பேசியபடி முதல்வர் ஸ்டாலினும் உணவருந்தினார்.

அதனைத் தொடர்ந்து காலை உணவுத் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஒரு மாணவர் கூட பசியோடு பள்ளிக்குச் செல்லக்கூடாது. காலை உணவுத் திட்டத்தில் பரிமாறப்படும் உணவின் தரம் ஒரு துளி கூட குறையக் கூடாது. காலை உணவுத் திட்டம் மூலம் பெற்றோரின் பொருளாதார சுமையை அரசு குறைத்துள்ளது. இத்திட்டம் அரசுக்கு செலவு இல்லை. எதிர்கால தலைமுறையை உருவாக்கும் முதலீடு. இத்திட்டத்தின் மூலம் 20.73 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் சத்தான உணவை சாப்பிடுகிறார்கள்” எனத் தெரிவித்தார். 

Next Story

ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
Armstrong'last journey has begun

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஏராளமான பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் உடலைக் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி அவரது மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்திருந்த உத்தரவில், “திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பொத்தூரில் நிலத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்து கொள்ளலாம். பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம் அமைத்துக் கொள்ளலாம். கட்சி அலுவலகத்தில் நினைவு மண்டபம் அமைக்க எந்த பிரச்சனையும் இல்லை. ஆம்ஸ்ட்ராங் நினைவாக நினைவு மண்டபம், மருத்துவமனை அமைக்க விரும்பினால் அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும். கண்ணியமான முறையில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும். காவல்துறை சார்பில் போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கி உள்ளது. இதில் அக்கட்சி தொண்டர்கள், உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டுள்ளனர். பெரம்பூரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள பொத்தூருக்கு அவரது உடல் வாகனம் மூலம் கொண்டுச் செல்லப்படுகிறது.  இறுதி ஊர்வலத்தையொட்டி 2 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கின் சவப்பெட்டியில் ‘ஜெய்பீம்’, ‘சமத்துவ தலைவர் ஆம்ஸ்ட்ராங்’ என வாசகங்கள் பொதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.