தமிழகத்தில் இன்று (10.05.2021) முதல் முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முக்கிய நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வேலைசெய்து வந்த வெளியூர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் பேருந்து நிலையத்திலேயே தஞ்சம் அடைந்தனர். அதேபோல் அண்ணாநகர், கோயம்பேடு, தி.நகர், அண்ணாசாலை உள்ளிட்ட இடங்கள்,ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.