Skip to main content

பிஜேபி மீண்டும் ஆளுகிற நிலை வந்தால் தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாது - திருமாவளவன். 

indiraprojects-large indiraprojects-mobile
thirumavalavan

 

தேசம் காப்போம் என்கிற தலைப்பில் திருச்சி பொன்மலை ஜி கார்னர் இராணுவ மைதானத்தில் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழகத்தின் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த கூட்டத்தின் கடைசியில் நிறைவுறுரை ஆற்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேசுகையில்,

 
இந்த மாநாட்டை தடை செய்ய சனாதன சக்திகள் காவல் துறையை அணுகி மனு அளித்தார்கள். ஆனால் தடைகளின் போதுதான் விடுதலைசிறுத்தைகள் திரண்டு வந்திருக்கிறார்கள். இந்த மாநாடு திமுக தேர்தல் கூட்டணியின் முதல் பிரச்சார கூட்டம். திமுக மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது. தோழர் ரவிக்குமார் குறி வைக்கப்பட்டிருக்கிறார். சனாதன் சன்ஸ்தா அமைப்பும் இந்த மாநாடு வெற்றியடைய காரணம். இந்து முற்போக்குவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 
 

காங்கிரஸ் ஆட்சியில் சனாதனிகள் வாய் பேசவில்லை. மோடி அரசில் அவர்கள் கொட்டமடிக்க களம் அமைத்து தந்திருக்கிறார்கள். தலித், கிறித்துவர், இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. வளர்ச்சி அடைந்தது யார் சனாதனிகள், அதானி, அம்பானி வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். மீண்டும் ஆளுகிற நிலை வந்தால் இந்த தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. ஹெச்.ராஜா போன்றோரெல்லாம் பெரியாரை விமர்சிக்கிறார். ஹெச்.ராஜாவுக்கு இந்த மாநாடு ஒரு பாடம். இது அம்பேத்கர், பெரியாருக்கு கிடைத்த வெற்றி. 
 

சனாதானத்துக்கு எதிரான போராட்டத்தை பெரியாரும், அம்பேத்கரும் முன்னெடுத்தார்கள். கௌதம புத்தர் சனாதனத்தை எதிர்த்தார். புத்தரின் காலத்திலிருந்து சமத்துவத்துக்கான, சகோதரத்துவத்துக்கான போராட்டம் துவங்கியது. சகோதரத்துவத்தால் சமத்துவம், சமத்துவத்தால் ஜனநாயகம் உருவாகும். சமத்துவத்தை வெறுப்பது சனாதனம். எல்லா ஜாதிக்குமிடையில் பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிப்பது சனாதனம். தாத்ரியில் இஸ்லாமியரை கொன்றது, அக்லாக்கை கொன்றது, பொது இடங்களுக்கு பெண்கள் செல்வதை தடுப்பது, அனுமதி மறுப்பது சனாதனம். சனாதனத்தின் உயிர், பாகுபாடுகளை பாதுகாப்பதில்தான் அடங்கியிருக்கிறது. பெண்களை சனாதனத்தின் வாயிலாக அடக்கி வாரிசுரிமை, மறுத்து பெண்ணுரிமை மறுத்த கோட்பாடு சனாதனம்.
 

வருணாசிரம், சனாதன தர்மத்துக்காக பெண்களை ஒடுக்கிய கோட்பாடு. குலத்தொழிலை தூக்கிப்பிடிப்பது சனாதனம். ஜோதிராவ் பூலே பெண்களுக்காக பள்ளிக்கூடம் உருவாக்கியவர். சாவித்திரி பூலே அதற்காக கல்லால் அடிக்கப்பட்டார். தனிச்சுடுகாடு நிலவுகிறது. தனி சேரி நிலவுகிறது. தேர்தல் களத்தில் தனித்து நிற்கிறோம். அப்படி நிற்கும் போது சமத்துவபுரத்தை உருவாக்கியவர் கலைஞர். All priest become archagars சட்டத்தை உருவாக்கியவர் கலைஞர். கேரளாவில் இதை சட்டமாக்கி இருக்கிறார்கள். கலைஞருக்கும், பெரியாருக்கும் இணைப்பு பாலமாக அண்ணா விளங்கினார் எனக் குறிப்பிட்டார்.
 

பதிணென் சித்தர்கள், பசவன்னா, நாராயணகுரு, வைகுண்டர் , அவ்வையார், திருவள்ளுவர் என அனைவரும் சனாதனத்தை எதிர்த்தனர். இவர்களை எல்லாம் ராஜா போன்றோர் எதிர்க்க முயல்கிறார்கள். அவர்களால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. விசிக, மார்க்சிஸ்ட் போன்றோர் ஒரு பாதையில் பயணிக்கிறார்கள். அகில இந்திய அளவில் தில்லு முல்லு செய்தாவது ஆட்சியை பிடிக்க எண்ணுகிறார்கள். சனாதன vs ஜனநாயக கோட்பாடுக்கு இடையே யுத்தம் நடக்கிறது. ஊழலால் நாட்டுக்கு ஆபத்து உண்டு. அதானி, அம்பானியால் கொழிக்கிறார்கள். கார்ப்பரேட்டுகள் ஆளுகிறார்கள். அவர்களின் அரசாக மோடி அரசு ஆளுகிறார். சனாதனத்தால் வருகிற ஆபத்து மிக தீங்கானது. சனாதன இந்தியாவை கட்டமைப்பது அவர்களின் நோக்கம். கம்யூனிஸ்ட்கள் பயங்கரவாதிகளாகவும், விசிக மீது வன்முறையாளராக சித்தரிக்கிறார்கள்.. சனாதன் சன்ஸ்தா மீது நீதிமன்றமும் குற்றத்தை உறுதிபடுத்துகிறது. நாற்பதுக்கு நாற்பது வெற்றி பெறுவோம். அதன் மூலம் மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைய அனைத்து கட்சிகளின் ஆதரவோடு செயல்படுவோம்.

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...