/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a1309.jpg)
மதுரையில் இருந்து தேனி மாவட்டம் போடி செல்லக்கூடிய ரயில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பியபோது பெட்டியின் ஒரு சக்கரம் மட்டும் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம்புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தேனி புறப்பட்ட ரயில் இன்று காலை சரியாக ஏழு முப்பது மணியளவில் பயணிகளுடன் புறப்பட்டபோது சிறிது நேரத்திலேயே பயங்கர சத்தம் வெளிப்பட்டது. பெட்டியில் இருந்த ஒரு சக்கரம் மட்டும் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது. இதனால் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் மற்றும் பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரயில் தடம்புரண்ட பகுதியில் பார்வையிட்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)