Advertisment

சென்னை மாநகராட்சி 9வது மண்டலம் ராயப்பேட்டை உட்லாண்ட்ஸ் திரையரங்க வளாகத்தில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மாநகராட்சி முன்களப்பணியாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையர் சரண்யா ஹாரி கலந்துகொண்டு பாதுகாப்பாக பணிபுரிவது பற்றி முன்களப்பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் 9வது மண்டல சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சரஸ்வதி, 9வது மண்டல உதவி ஆணையர் ஜெ. ரவிக்குமார், உதவி செயற்பொறியாளர் குகன், உதவி பொறியாளர் இ. அருள் செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.