சென்னையில் கரோனாபாதிப்பு தினம், தினம் அதிகரித்து வரும் நிலையில்,பல காவல்துறை அதிகாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது, சென்னையில் காவல்துறை துணை ஆணையருக்கு கரோனாஇருப்பது கண்டறியப்பட்டுள்ளது.அதேபோல் சென்னையில் இதுவரை காவல்துறையை சேர்ந்த406பேருக்குகரோனா உறுதிசெய்யப்பட்டு, அதில் 140 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் ஏற்கனவே கரோனாவால்பாதிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி ஒருவர்உயிரிழந்த நிலையில், மற்றுமொரு காவல்துறை அதிகாரிக்கும் கரோனாஇருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் டிஎஸ்பிக்கள் 3 பேருக்குகரோனாஇருப்பது கண்டறியப்பட்டுள்ளது.