Advertisment

வணிக வரித்துறை துணை ஆணையர் தற்கொலை?; போலீசார் தீவிர விசாரணை!

 Deputy Commissioner of Commercial Taxes incident Police investigation

Advertisment

சென்னை போரூர் அருகே உள்ள அம்பாள் நகர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் வேல். இவர் தமிழக அரசின் வணிக வரித்துறையில் துணை ஆணையராகச் செங்கல்பட்டில் பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழ்நிலை தான் இவரைக் காணவில்லை என அவரது உறவினர்கள் போரூர் காவல் நிலையத்தில் நேற்று (05.12.2024) புகார் அளித்திருந்தனர் இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதனையடுத்து போளூர் மேம்பாலம் அருகே செந்தில் வேல் வாகனம், அவரது உடைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதோடு மதுரவாயல் தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஏரியில் இறங்கித் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் தான் செந்தில் வேல் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

பணிச் சுமை காரணமா அல்லது கடன் பிரச்சினையா?. எதற்காகத் தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வணிகவரித்துறை துணை ஆணையர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chengalpattu Investigation police incident porur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe