பல கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதல்வர் உதயநிதி!

Deputy CM Udhayanidhi has provided welfare assistance worth crores

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மாவட்டத்திலுள்ள திட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களான சரவணகுமார், கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன் உள்பட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Deputy CM Udhayanidhi has provided welfare assistance worth crores

அதன்பின் ஆதிதிராவிடர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட 23 துறைகளைச் சேர்ந்த 851 பயனாளிகளுக்கு 13 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி வழங்கினார். அதனைத் தொடர்ந்து தேனி புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் வசதிக்காக மூன்று வழித்தடங்களில் 9 மினி பேருந்து சேவையை உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், கம்ப சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கொண்டனர். அதைத்தொடர்ந்து இளைஞரணி மற்றும் மகளிர் அணி சார்பாக ஆலோசனைக் கூட்டம் தேனி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி கலந்துகொண்டு கட்சி வளர்ச்சி மற்றும் வரக்கூடிய சட்டமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசனை வழங்கினார். இதில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உள்பட மாவட்ட கட்சி பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Theni Udhayanidhi Stalin
இதையும் படியுங்கள்
Subscribe