Advertisment

ஓ.பி.எஸ். வீட்டுக்கு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வருகை!

deputy cm opaneerselvam meet former minister manikandan admk leaders

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வருகை தந்துள்ளார்.

Advertisment

அ.தி.மு.க.வின் செயற்குழுக்கூட்டம் நேற்று நடந்து முடிந்தநிலையில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று (29/09/2020) தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி. எம்.பி., முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisment

இந்த நிலையில், கடந்த ஆண்டு தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்தார். அ.தி.மு.க.வின் நிர்வாகிகள் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பி.எஸ்.யைச் சந்தித்து வருவது, அ.தி.மு.க. கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

admk Meet manikandan DEPUTY CM PANEER SELVAM Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe