அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாகச் சென்றுள்ளார். தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இன்று நெபர்வல்லியிலுள்ள மூத்த குடிமகன்களுக்கான‘மெட்ரோபாலிட்டன் ஏசியா ஃபேமிலி சர்வீசஸ்’மையத்தின் சார்பில், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு‘மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்’(MAFS Gandhi Sesquicentennial Medallion of Excellence) பதக்கம் வழங்கி அவரை கவுரவித்தனர்.

deputy cm o paneerselvam america award theni mp raveendranath kumar

Advertisment

பதக்கத்தினை வழங்கிய 86 வயதான பிரதாப்சிங், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தேனி எம்.பி. ரவீந்திரநாத்குமாருக்கும் மகாத்மா காந்தி சக்ரா மற்றும் பாக்கெட் கடிகாரத்தை நினைவுப்பரிசாக வழங்கினார்.சிகாகோ நகரிலுள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்புகள் குறித்து உரையாற்றினார்.