தமிழகத்தில் கரோனாவின் இரண்டாம் அலையில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுவருகின்றனர். கரோனாவின் இரண்டாம் அலையை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. குறிப்பாக கரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கையும், கரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசியையும் தமிழக அரசு பெரும் துணையாக கொண்டு செயல்பட்டுவருகிறது.
இந்நிலையில், கிராமப் புறங்களில் விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய பழ வகைகளை நேரடியாக விவசாயிகளிடம் விலை கொடுத்து வாங்கி, அதனை முன்கள பணிடில் ஈடுப்பட்டிருக்கும் மருத்துவ பணியாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் மற்றும் முழு ஊரடங்கில் உணவில்லாமல் தவிக்கும் சாலையோர மக்களுக்கும் கொடுத்துவருகிறார் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா. இவரோடு இணைந்து மனித உரிமை ஆணையமும் இந்தப் பணியை தற்போது செய்யத் துவங்கியுள்ளது.