/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/udhayanidhini_0.jpg)
சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுத்திருந்ததையடுத்து, கடந்த 14ஆம் தேதி முதலே, சென்னையின் பல பகுதிகளில் கனமழையானது பெய்து வந்தது. இதனால், சென்னையில் உள்ள புறகர் பகுதிகளில் மழை நீர் தேங்கியிருந்தது. இருந்த போதிலும், தமிழக அரசு எடுத்த துரித நடவடிக்கையால், சாலைகளில் இருந்த தண்ணீர் அனைத்தும் உறிஞ்சப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. பெரும்பாலான இடங்களில் மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டதால், இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்த நிலையில், சென்னை வேப்பேரியில் தூய்மை பணியாளர்கள், செவிலியர்களுக்கு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதவிகளை வழங்கினார். இதனையடுத்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “சென்னை மழையின்போது சொன்னதை செய்து காட்டினோம். தூய்மை பணியாளர்கள் களத்தில் இருந்ததால் நாங்கள் மழையை எதிர்கொள்ள தயாராக இருந்தோம். சென்னை ஒரு குழந்தை என்றால் அதற்கு தாய் தூய்மை பணியாளர்கள். எப்படிப்பட்ட பெருமழை வந்தாலும் சென்னை மக்களை காக்க களத்தில் இருக்கிறோம்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)