Advertisment

சென்னை புத்தகக்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

48ஆவது சென்னைப்புத்தகக்காட்சிசென்னை நந்தனம்ஒய்எம்சிஏமைதானத்தில் இன்று (27.12.2004 - வெள்ளிக்கிழமை) மாலை 04.30 மணி அளவில் தொடங்கியது. இந்தபுத்தகக்காட்சியைதமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன்வெட்டி தொடங்கி வைத்தார். அப்போது நக்கீரன் ஆசிரியர், அமைச்சர்கள் அன்பில்மகேஷ்பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன், சென்னைமேயர்பிரியா ராஜன், துணைமேயர்மகேஷ்குமார், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனிஆகியோர் உடன் இருந்தனர். இந்தபுத்தகக்காட்சிஜனவரி 12ஆம் தேதி (12.01.2025) வரை நடைபெற உள்ளது. இந்தபுத்தகக்காட்சிவிடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். மொத்தம் 17 நாட்கள்புத்தகக்காட்சிநடைபெறுகிறது. மொத்தம் 900அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து நூல்களுக்கும் அனைத்து அரங்கிலும் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Advertisment

பபாசியில்உறுப்பினரல்லாதவர்கள் விண்ணப்பித்த பெரும்பாலானோருக்கும் அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்படும் நூல்களுக்கென இந்த ஆண்டு தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி ஓவியப் போட்டிகள் நடைபெறுகிறது. தமிழக அரசின் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் சாகித்தியஅகாதமி,டாக்டர்அம்பேத்கர்பவுண்டேஷன்நேஷனல்புக்டிரஸ்ட்பப்ளிகேஷன்டிவிஷன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் தொல்லியல்துறை, ஆகிய நிறுவனங்களும் கலந்துகொள்கின்றது. இல்லம் தேடிக் கல்வி இயக்கம் பங்கெடுக்கின்றது. உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனங்களும் கலந்து கொள்கின்றது. ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரைகள் இடம் பெற உள்ளது. நிறைவு நாள் நிகழ்வில் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் விழாநிறைவுரைநிகழ்த்த உள்ளார்.

Advertisment
Dindigul I. Leoni mayor priya rajan Ma Subramanian anbil mahesh udhayanithi stalin book fair Chennai chennai book fair
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe