Advertisment

ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுத்துட்டு ரோட்டுல சிந்தூரா பாடிக்கிட்டு போக முடியுமா! - ஓபிஎஸ் தம்பி ராஜாவின் ஆடியோ

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, நுகர்வோர் அமைப்பு மாவட்ட தலைவருடன் பேசிய ஆடியோ தேனி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஆடியோ வாட்சப் மற்றும் பேஸ்புக்கில் காட்டுத் தீ போல் பரவி வருவது பெரும் சர்ச்சையை எழுப்பி வருகிறது. துணை முதல்வரான ஓபன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா பெரியகுளத்தில் முன்னாள் சேர்மேனாகவும் இருந்தவர்.

Advertisment

raja

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

தற்போது மதுரை ஆவின் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருக்கிறார். தனது அரசியல் செல்வாக்கை பன்னீர்செல்வம் பயன்படுத்தி தனது தம்பிக்கு பதவி வாங்கி கொடுத்துவிட்டார் என்ற சர்ச்சை ஒருபுறம் இருந்து வருகிறது. இந்தநிலையில் தான் ஓ.ராஜாவும் தென்னிந்திய பார்வர்டு பிளாக் பெரியகுளம் நகர பொதுச் செயலாளரும், நுகர்வோர் அமைப்பின் மாவட்ட தலைவருமான துரை என்பவரிடம் பேசிக்கொள்ளும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

raja

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

பெரியகுளம் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் வாங்கும் பொருள்களோடு வெளிப் பொருட்களையும் பொதுமக்களை வாங்கச் சொல்வதின் மூலம் அதிக விலைக்கு ரேசன் கடைகளில் பொருட்களை விற்கப்படுவதாகவும் அதற்கு துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா தான் காரணம் என ரேசன் கடை ஊழியர்கள் பலர் துரையிடம் புகார் கூறி இருக்கிறார்கள். இந்த விஷயம் பன்னீர்செல்வம், ராஜா காதிற்கு எட்டியிருக்கிறது. அதை தொடர்ந்துதான் துரையிடம் போனில் பேசிய ராஜாவோ, “ரேசன் கடைகளுக்கு சென்று பிரச்சனை செய்கிறார் என கேட்கிறார். நான் நுகர்வோர் அமைப்பில் இருக்கிறேன் ஒரு கார்டுக்கு 40 ரூபாய் வீதம் ஒன்றேகால் லட்சம் கமிசன் அடிக்கிறார்கள். அதனால்தான் கேட்டேன் என்கிறார் துரை. நீ தேவையில்லாத வேலை பார்க்கிறாய் உன் பிழைப்பை மட்டும் பார் எல்லாம் எங்களுக்கு தெரியும். ஒரு மீட்டிங் போட்டு செலவளிக்க வேண்டும். நீயா செலவு செய்வாய் கொள்ளையடிக்காமல் காரில் போக முடியுமா? நீ தேவை இல்லாத வேலை பார்க்கிறாய தேவையில்லாமல் கடையில் போய் கரைச்சல் பண்ணாத வெட்டியாய் கெட்டுப் போயிருவ ஒன்னும் செய்ய முடியாது. ஏற்கனவே ரவி அண்ணன்ட்ட சொன்னேன். அவர் கடைக்காரர்ட்ட சொல்லிட்டேன்னாரு அதற்கு அப்புறமும் அப்படியேதான் நடக்குது அதையெல்லாம் ரவி பார்த்துக் கொள்வார். நீங்க விற்க வேணாம்னு சொல்லுங்கப்பா. அப்படியெல்லாம் சொல்ல முடியாது. அரசியல்வாதி நாங்க இளிச்சவாயனா? ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுத்துட்டு ரோட்டுல சிந்தூரா பாடிக்கிட்டு போக முடியுமா? ராஜா கொள்ளையடிக்காமல் காரில் போகமுடியுமா எல்லோருமே உங்களுக்கு பங்கு போகுதுன்னு சொல்றாங்கப்பா. ஆமா பங்கு வரத்தான் செய்யும் பேசாம உன் வேலைய பாரு இதுதான் என் கடைசி வார்த்தை” இவ்வாறு அந்த ஆடியோவில் பல விசயங்கள் பேசப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!

admk ops ops o raja
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe