Published on 13/12/2024 | Edited on 13/12/2024

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
தொடர் கனமழை காரணமாக சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் அதிகப்படியான நீர்வரத்து இருந்து வருகிறது. அதேபோல் நீர் வெளியேற்றமும் நீர்வரத்தைப் பொறுத்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். உடன் அமைச்சர் த.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.
தற்பொழுது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 4,600 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரி தொடர் நீர்வரத்து காரணமாக 23.5 அடியாக உள்ளது.