A depression formed Chance of heavy rain

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

அடுத்த இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகம் - இலங்கை நோக்கி நகரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி சென்னையில் இன்று (11.11.2024) முதல் 15ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisment