மத்திய கிழக்கு வங்கக் கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. 48 மணி நேரத்தில் வலுப்பெறும் இந்த புயல், வரும் 24ஆம் தேதி மேற்குவங்கம், ஒடிசா கடற்கரையையொட்டி ‘டானா’ புயல் கரையைக் கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று காலை உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்னும் தீவிரமடைந்து 23ஆம் தேதி புயலாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று திசை வேகத்தை வைத்து பார்க்கையில் இந்த புயலானது வடமேற்கு திசை நோக்கி நகரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. கத்தார் நாடு கொடுத்த பரிந்துரையின் பேரில் இந்த புயலுக்கு ‘டாணா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 2024ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக்கடலில் உருவாகும் முதல் புயல் இது என்பது குறிப்பிடத்தக்கது.