Depicting as an accident; Police investigation

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கொலை செய்துவிட்டு இருசக்கர வாகன விபத்து போல் சித்தரித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisment

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சத்தியமங்கலம்-கோவை சாலையில் இருசக்கர வாகனத்துடன் நபர் ஒருவர் விழுந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்ற போலீசார் கீழே உயிரிழந்த நிலையில் கிடந்த நபரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடப்பது தனியார் பள்ளி வாகன ஓட்டுநரான மாரிமுத்து என்பது தெரியவந்தது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தலையில் வெட்டு காயங்கள் இருப்பதைக் கண்டறிந்த போலீசார் நிகழ்ந்தது கொலை என்பதை ஊர்ஜிதம் செய்தனர்.

nn

Advertisment

கொலை செய்துவிட்டு விபத்தில் இறந்தது போல் ஒரு சக்கர வாகனத்தை கீழே போட்டு அதனருகே மாரிமுத்துவின் உடலை கொலையில் ஈடுபட்டவர்கள் போட்டுச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவத்தில் மோப்ப நாய் உதவியுடன் முதற்கட்டமாக போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில் கொலையில் ஈடுப்பட்ட நபர்களை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.