இன்று காலை மருத்துவக் குழுவினருடன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதில் கரோனா பரவலைதடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஆலோசித்தார்.
இந்நிலையில், பொதுமுடக்கம் குறித்து அறிவிப்புகள் தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொதுமுடக்கம்நீடிப்பு குறித்து தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிடும் என தகவல் வெளியாகி உள்ளது. மாவட்ட நிர்வாகங்களுக்கு ஏற்ப பொது முடக்கத்தை நீட்டிக்க தமிழக அரசு முடிவெடுத்து இருப்பதாகவும், சென்னை அல்லாத மாவட்டங்களில் அதிகமாக கரோனா பாதிப்புஇருப்பதால் மாவட்ட நிலவரத்தை அரசு கருத்தில் கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.