ADVERTISEMENT

திருவிழா நடத்த அனுமதி மறுப்பு; அன்னதானத்திற்கு வெட்டப்பட்ட காய்களை ரோட்டில் கொட்டி போராட்டம்

10:40 AM Mar 01, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுக்கோட்டையில் கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஒரு தரப்பினர் காய்கறிகளை சாலையில் கொட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் பழமை வாய்ந்த பட்டவையனார் கோவில் இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் இந்த கோவிலுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்நிலையில் இந்த கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருவேறு தரப்பினருக்கிடையே பிரச்சனை ஏற்பட்டது. ஆலங்குடி வட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டது. இனிமேல் திருவிழா நடத்தினால் சேர்ந்து நடத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஒரு தரப்பினர் இன்று பால்குடம் எடுத்து விழா எடுக்க அனுமதி கேட்ட நிலையில் தனியாக திருவிழா நடக்கக்கூடாது என எதிர் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், அனுமதி மறுக்கப்பட்ட தரப்பினர் இன்று அன்னதானம் வழங்குவதற்காக வெட்டி வைக்கப்பட்ட காய்கறிகள், பால் உள்ளிட்டவற்றை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் ஒரு தரப்பிற்கு ஆதரவாக செயல்படுவதாக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT