Advertisment

தியேட்டரில் அனுமதி மறுப்பு; நாடோடி பழங்குடியினர் போலீசில் புகார்

Denial of admission to theatre; Nomadic tribes report to police

கடலூரில் நாடோடி பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு தியேட்டரில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நாடோடிகள் பழங்குடியின பிரிவை சேர்ந்த மக்கள் சிலர் மாவட்டம் மாவட்டமாக பாத்திரம் விற்கும் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் வெயில் அதிகமாக இருக்கும் காரணத்தால் கடலூரில் உள்ள 'நியூ சினிமா' திரையரங்கில் நடிகர் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள 'கருடன்' திரைப்படத்தை பார்க்க வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

ஆனால் காலை 8 மணி முதலே காத்திருந்த போதும் இறுதிவரை திரையரங்கில் டிக்கெட் தர மறுத்து விட்டனர் என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.எல்லோருக்கும்டிக்கெட் வழங்கப்பட்ட நிலையில் தங்களுக்கு ஏன் டிக்கெட் கொடுக்கப்படவில்லை என கேட்டதற்கு தியேட்டர் நிர்வாகம் சரியான பதில் கொடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து காவல் நலையத்தில் புகார் கொடுத்தார்கள். தமிழகத்தில் பல இடங்களில் பல மாவட்டங்களில் உள்ள பல திரையரங்குகளில் சென்று திரைப்படம் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கு மட்டும் எங்களுக்கு அனுமதி மறுத்துள்ளார்கள். இதற்கான காரணம் என்ன என தெரிய வேண்டும் என அந்த புகாரில் தெரிவித்துள்ளனர்.

Untouchability incident theater Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe