Denial of admission to the theater for the people of Narikuravar community

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள லாடபுரம் எம்ஜிஆர் நகரில் 30-க்கும் மேற்பட்ட நாடோடி பழங்குடிஇனத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் குடும்பத்துடன் ஊர் ஊராக சென்று பாத்திரங்கள் விற்பனை மற்றும் சிக்கு முடி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை கடலூர் வந்த இவர்கள் நியூ சினிமா தியேட்டருக்குப் படம் பார்க்க செல்ல முடிவு செய்தனர்.

Advertisment

இதையடுத்து அவர்கள் அனைவரும் நியூ சினிமா தியேட்டருக்குச் சென்று படத்திற்கு டிக்கெட் கேட்டுள்ளனர். அப்போது கவுண்டரில் இருந்த ஊழியர்கள் டிக்கெட் கொடுக்க மறுத்ததுடன் வெளியே செல்லுமாறு கூறியதாகத்தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாடோடி பழங்குடிஇனத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் தங்களைப் படம் பார்க்க அனுமதிக்கவில்லை என்று கூறி கோட்டாட்சியர்அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

இதுபற்றி தகவல் அறிந்த தாசில்தார் பலராமன் விரைந்து வந்து அவர்களிடமும், தியேட்டர் உரிமையாளரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து நாடோடி பழங்குடி மக்களைபடம் பார்க்க அனுமதிப்பதாக தியேட்டர் உரிமையாளர் கூறினார். அதன் பின்னர்தாசில்தார் தனது காரிலேயே அவர்களைத்தியேட்டருக்கு அழைத்துச் சென்றார். இந்தச் சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது