வேலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 348 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர்14 வரை 792 பேருக்கு டெங்கு பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கில் சேர்த்து மொத்தம் 1000 படுக்கைகள் மட்டுமே உள்ளது. இதில் பிரசவ வார்டு போக மீதம் 700 படுக்கைகளே உள்ளன.
இதனால் டெங்கு பாதித்த அனைவரையும் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிப்பது இயலாத காரியமாகவுள்ளது.
"மாவட்டத்தில் 792 பேருக்கு டெங்கு பாதிக்கப்பட்டிருப்பது உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தை காட்டுகிறது. தொடர்ந்து டெங்கு பாதிப்பு அதிகரித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.