dengue tamilnadu health department chennai high court order

Advertisment

தமிழகம் முழுவதும் உள்ள நகரங்களில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த, சுகாதாரத் துறை அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி செயல் திட்டம் வகுக்க வேண்டும் என, தமிழக சுகாதாரத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் மூலம் டெங்கு பரவுவதால், அந்த வாகனங்களை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடக் கோரி. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரியபிரகாசம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “மக்களுக்கு ஆரோக்கியத்தில் அக்கறையில்லை..” என வேதனை தெரிவித்த நீதிபதிகள், “சென்னை மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும், மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி, டெங்கு நோய் பரவலைத் தடுப்பதற்கான செயல் திட்டத்தை வகுக்க வேண்டும். இதுசம்பந்தமாக நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.” என தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டனர்.

Advertisment

இதேபோல, ‘சென்னை மாநகராட்சியில், நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.’ என சென்னை மாநகராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.