Advertisment

டெங்கு பரவும் அபாயம்! அச்சத்தில் புழுதிவாக்கம் மக்கள்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை மறறும் சென்னை சுற்றுப் பகுதியில் மழை பெய்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முழுவதும் தொடர் மழை பெய்தது. இதனால் சென்னை மற்றும புறநகர்களில் மழை நீர் தேங்கி நின்றது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல் சென்னை அருகே புழுதிவாக்கம் ஜெயாநகர் முதல் தெருவில் மழை காரணமாக தண்ணீர் அங்கேயே தேங்கி நின்றது.

Advertisment

 dengue spreading Pulutivakkam

சாலைகளில் தேங்கி நின்ற மழை நீருடன், துர்நாற்றத்துடன் கூடிய கழிவு நீரும் கலந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சாலையில் நீர் அப்படியே தேங்கி நிற்பதால் அதிலேயே நடந்து செல்ல வேண்டியிருப்பதாக கூறும் மக்கள், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர். இப்படியே விட்டால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் ஏற்படும் என்று அச்சம் நிலவுவதாக தெரிவித்தனர்.

Chennai DENGUE FEVER Dengue
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe